பருத்தியிலிருந்து பட்டுக்கு மாறும் நெசவாளர்கள்!
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த முசிறி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கைத்தறி நெசவுத் தொழில் பிரபலமாக உள்ளது. இத்தொழிலில் தற்போது போதிய ஊதியமின்மை, வேலைவாய்ப்பில் நிச்சயமற்றதன்மை, கடுமையான போட்டி போன்ற பல்வேறு காரணங்களால் பருத்தி கைத்தறி நெசவாளர்கள் அனைவரும் பட்டு நெசவுக்கு மாறிவருகின்றனர். ஏனெனில், பட்டு நெசவுத் தொழிலில் நிலையான ஊதியம் கிடைப்பதோடு, ஆர்டர்களும் உறுதியானவகையில் கிடைக்கின்றன.மத்திய அரசும் பருத்தி கைத்தறித் தொழிலை மேம்படுத்த, கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளும் பயனற்றுப் போயின. இத்தொழிலை தரம் உயர்த்தும் முயற்சியில் அதிக செலவினம் ஏற்பட்டதால் நிதி நெருக்கடி ஏற்பட்டது. எனவே, குறிப்பிடத்தகுந்த அளவிலான வளர்ந்துவரும் நெசவாளர்களும் பரம்பரை பரம்பரையாக பருத்தி சேலை, வேஷ்டி ஆகியவற்றை நெய்துவரும் நெசவாளர்களும் பருத்தி நெசவை விடுத்து, பட்டு நெசவுக்கு மாறிவருகின்றனர்.
உதாரணத்துக்கு, முசிறியிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள மனமேடு
என்ற கிராமத்தைச் சேர்ந்த எம்.தங்கவேல் என்பவர், கடந்த 25 ஆண்டுகளாகவே
பருத்தி சேலை, வேஷ்டி ஆகியவற்றை நெய்வதில் சிறந்த பயிற்சியும் அனுபவமும்
பெற்றவர். இவரது அனுபவமும் பயிற்சியும் இவருக்கு போதிய ஊதியத்தையோ,
ஆர்டர்களையோ பெற்றுத் தரவில்லை. எனவே, தங்கவேலும் அவரது மனைவி
பரமேஸ்வரியும் பட்டு நெசவு குறித்து கற்றுக்கொள்ள நான்கு மாத பயிற்சி
வகுப்புக்குச் சென்றுள்ளனர்.
இதுபற்றி தங்கவேல் கூறுகையில், ‘சேலத்தைச் சேர்ந்த ஒரு நெசவாளர் எங்களுக்குத் தேவையான பட்டு நூல் முதலான நெசவுக்குத் தேவையான பொருட்களை வழங்குகிறார். நாங்கள் அவற்றை நெய்து வழங்கி, மாதத்துக்கு ரூ.10,000 வரையில் ஊதியம் பெறுகிறோம். ஆனால் பருத்தி ஆடைகளை நெய்தபோதுகூட எங்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.3,000 மட்டுமே கிடைத்தது’ என்கிறார்.
முசிறி மற்றும் தாத்தையங்கார் பேட்டையில் 6 குழுக்களைச் சேர்ந்த சுமார் 6,000 நெசவாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு சேலத்திலிருந்து உறுதியானவகையில் ஆர்டர்களும் ஊதியமும் கிடைப்பதாகத் தெரிவிக்கின்றனர்.
‘முன்னதாக, தஞ்சாவூரைச் சேர்ந்த சர்வோதயா அமைப்பானது எங்களுக்கு உறுதியானவகையில் ஊதியமும் ஆர்டர்களும் வழங்கியது. ஆனால் நெசவுக்குத் தேவையான நூல் உள்ளிட்ட உதிரி பாகங்களைப் (மூலப்பொருட்கள்) பெறுவதற்கு நாங்கள் தஞ்சாவூர் சென்றுதான் பெறவேண்டும். ஆனால் சேலத்திலிருந்து கிடைக்கும் ஆர்டர்களை செய்து தருவதற்குத் தேவையான உதிரி பாகங்கள் அனைத்தும் எங்களது கிராமத்துக்கே நேரடியாகக் கொண்டு வரப்படுகிறது. மேலும் நெசவு முடிந்து தயார்நிலையில் இருக்கு பட்டுச் சேலை, வேஷ்டி, சால்வை ஆகியவற்றை அவர்களே இங்கு வந்து எடுத்துச் செல்கின்றனர்’ என்று கூறிமுடித்தார் தங்கவேல்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக